© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
ஜியூஸைகொவ் 2வது சர்வதேச உயிரினச் சுற்றுலா காலம் என்ற நிகழ்வு ஜூலை 31ஆம் நாளிரவு சிச்சுவான் மாநிலத்தின் ஜியூஸைகொவ் மாவட்டத்தில் துவங்கியது. கடந்த சில ஆண்டுகளாக, இம்மாவட்டம், தனிச்சிறப்புடைய இயற்கை மூலவளங்களைப் பயன்படுத்தி, பண்பாட்டுக்கும் சுற்றுலா துறைக்குமிடையிலான ஒன்றிணைப்பை ஆழமாக்கி, “உலக உயிரினச் சுற்றுலா இடம்” என்ற கட்டுமானத்தை முன்னேற்றி, பெரும் சாதனைகளைப் பெற்றுள்ளது. மென்மேலும் உள்ளூர் மக்கள் இதன் மூலம் பயனடைந்து, வருமானத்தை அதிகரித்துள்ளனர். அத்துடன், இம்மாவட்டம் மென்மேலும் அதிகமான பயணிகளை ஈர்த்துள்ளது. புள்ளிவிவரங்களின்படி, இவ்வாண்டின் முற்பாதியில், ஜியூஸைகொவ் மாவட்டத்தில் பயணம் மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை 35 லட்சத்தை எட்டி, கடந்த ஆண்டில் அதே காலத்தில் இருந்ததை விட 23.8 விழுக்காடு அதிகமாகும்.