ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் கொலை செய்யப்பட்டது குறித்து சீனா கருத்து
2024-08-01 20:18:10

ஜூலை 31ஆம் நாள் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் கொலை செய்யப்பட்டது குறித்து சீன வெளியுறவு அமைச்சக்கத்தின் செய்தித்தொடர்பாளர் லீன் ஜியன் ஆகஸ்ட் முதல் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், மறைமுகமாக கொலை செய்யும் செயலை சீனா உறுதியுடன் எதிர்க்கிறது. இச்சம்பவத்தால் பிரதேச நிலைமை மேலும் பதற்றமாக இருக்கக் கூடும் என்பதற்கு ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறது. காசாப் பிரதேசத்தில் பன்முக போர் நிறுத்தம் வெகுவிரைவில் நனவாக்கப்பட்டு, பகைமை மேலும் தீவிரமாகி வருவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார். பாலஸ்தீனத்தின் உள்புற இணக்கத்தை சீனா எப்போதும் ஆதரித்து, பாலஸ்தீனத்தின் உள்புறத்தில் இணக்கத்தை நனவாக்குவது, பாலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்த்து, மத்திய கிழக்கு பிரதேசத்தில் அமைதி மற்றும் நிதானத்தை நனவாக்கும் முக்கிய காலடியாகும் என கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மத்திய கிழக்குப் பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிகாக்க சீனா எப்போதும் பாடுபடுகிறது என்றும், தொடர்புடைய பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, பிரதேசத்தின் நீண்டகால நிதானத்தை விரைவுபடுத்துவதற்கு தொடர் முயற்சி மேற்கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.