அப்பாவி மக்களைப் புண்படுத்தும் எந்த செயலையும் சீனா கண்டித்தது
2024-08-02 19:10:55

அண்மையில் லெபனான் தலைநகர் பெய்ரூட்வின் தெற்கு புறநகர் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியது. லெபனான், ரஷியா, ஈரான் மற்றும் சிரியா முதலிய நாடுகள் இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்தன. ஆகஸ்ட் 2ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் இது தொடர்பாக செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின் ஜியன் கூறுகையில், அப்பாவி மக்களைச் புண்படுத்தும் எந்த செயலையும் சீனா கண்டித்து, தற்போதைய சம்பவத்தில் பெரும் கவனம் செலுத்துகிறது என்றும் பதற்ற நிலைமை மேலும் தீவிரமாகுவதைத் தவிர்க்கும் வகையில் தொடர்புடைய பல்வேறு தரப்புகள் கட்டுப்பாடு மற்றும் தெளிந்த சிந்தனையுடன் செயல்பட வேண்டும் என சீனா வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்தார்.