© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
ஜூலை திங்கள் இறுதியில், புதிய சுற்று பிலிப்பைன்ஸ்-அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 2013ஆம் ஆண்டு முதல் இது வரை, இத்தகைய பேச்சுவார்த்தையை பிலிப்பைன்ஸ் முதன்முறையாக நடத்தியது. இதற்கு முன்பு, சீனாவும் பிலிப்பைன்ஸும் சீனாவின் நான்ஷா தீவுகளின் ரென்ஏய் ஜியவோ பகுதி குறித்து தற்காலிகமாக ஒருமித்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளன. தென் சீனக் கடல் சர்ச்சை தற்காலிகமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மாறாக, தென் சீனக் கடலில் நிதானம் ஏற்படும் என்பதை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை.
தென் சீன கடல் பிரச்சினையில், பிலிப்பைன்ஸை அமெரிக்கா தூண்டி விட்டது. தவிரவும், பிலிப்பைன்ஸுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருகிறது. இதன் விளைவாக, பிலிப்பைன்ஸ் சீனா மீது ஆத்திரமூட்டும் பேராசை விரிவாகியுள்ளது. ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ், சீனாவுடன் கடல் சர்ச்சையைக் கையாளும் போது, இப்பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்தில் உறுதியாக கருத்தில் கொள்ள வேண்டும்.
அமெரிக்கா வசீகரிக்கும் போது, பிலிப்பைன்ஸ் மேலதிகமான விழிப்பு மற்றும் பகுத்தறிவுடன் செயல்பட வேண்டும். பிலிப்பைன்ஸின் வெளிநாட்டு கொள்கை, இப்பிரதேசத்தை முக்கியமாக கருத்தில் கொண்டு, அண்டை நாடுகளுடன் நட்புடன் பழக வேண்டும். இது, பிலிப்பைன்ஸின் தேசிய நலன் மற்றும் மக்களின் பயன்களுக்குப் பொருந்திய சரியான தேர்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.