இலங்கையின் அந்நியச் செலாவணி வருவாய் ஜூன் மாதத்தில் 586 மில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது
2024-08-02 17:42:48

இலங்கையில் கடந்த ஜூன் மாதத்தில் ஏற்றுமதி, வெளிநாட்டு பண பரிவர்த்தனை மற்றும் மொத்த சேவைகள் மூலம் அந்நாட்டின் அந்நிய செலாவணி வருவாய் இறக்குமதியை விட 586 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூன் மாதத்தில் ஏற்றுமதி 1.08 பில்லியன் டாலர்களாகவும்,  வெளிநாட்டு பண பரிவர்த்தனை 519.6 மில்லியன் டாலர்களாகவும், சுற்றுலா உள்ளிட்ட மொத்த சேவைகள் 436.2 மில்லியன் டாலர்களாகவும் இருந்ததாக இலங்கையின் மத்திய வங்கி  வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் மொத்த இறக்குமதி சுமார் 1.45 பில்லியன் டாலர்களாக இருந்தது.

2024 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் டாலருக்கு எதிரான அந்நாட்டின் உள்நாட்டு நாணய ரூபாயின் நாணய மாற்று விகிதம் 7.1 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.