இந்திய பிரதிநிதிக் குழுவுடன் இந்தியாவுக்கான சீனத் தூதர் சந்திப்பு
2024-08-02 22:07:51

சீனாவில் பயணம் மேற்கொண்ட இந்தியாவின் பண்பாடு மற்றும் கலை துறையினர்கள் அடங்கிய பிரதிநிதிக் குழுவுடன், இந்தியாவுக்கான சீனத் தூதர் ஷு ஃபெஹொங் ஜூலை 31ஆம் நாள் உரையாடல் நடத்தினார். சீன-இந்திய பண்பாட்டுப் பரிமாற்றம் மற்றும் பொது அக்கறை கொண்ட அம்சங்கள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

ஷு ஃபெஹொங் கூறுகையில், இலக்கியம், இசை, தத்துவம், நுண்கலை, வரலாறு முதலிய துறைகளில், சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையில் பொது அம்சங்கள் அதிகம். அடுத்த ஆண்டு, சீன-இந்தியத் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவாகும். இரு நாட்டுத் தலைவர்கள் எட்டியுள்ள முக்கிய ஒத்தக் கருத்துகளை இரு தரப்பும் செவ்வனே செயல்படுத்தி, பஞ்ச சீல கோட்பாடுகளைப் பரவல் செய்து, இரு நாட்டுறவின் மேம்பாடு மற்றும் வளர்ச்சியை ஆக்கமுடன் முன்னேற்ற வேண்டும் என்றார்.

சீனப் பயணம் பற்றி இப்பிரதிநிதிக் குழுவினர்கள் ஷு ஃபெஹொங்குடன் பகிர்ந்து கொண்டனர். சீனாவின் வளர்ச்சியும், சீன மக்களின் அன்பும் அவர்களது மனதில் ஆழப்பதிந்துள்ளன. கவிதை, தத்துவம், மொழிபெயர்ப்பு, ஓவியம், இளைஞர் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகள் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்த விரும்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.