மொரிட்டானியா அரசுத் தலைவர் பதவி ஏற்பு விழாவில் சீன அரசுத் தலைவரின் சிறப்புத் தூதர் பங்கெடுப்பு
2024-08-02 18:37:20

மொரிட்டானியா இஸ்லாமிய குடியரசின் அரசுத் தலைவர் கசோவானியின் அழைப்பை ஏற்று, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் சிறப்புத் தூதரும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டியின் துணைத் தலைவருமான வாங் குவாங்ச்சியான், ஆகஸ்டு முதல் நாள் மொரிட்டானியாவின் தலைநகர் நவாக்சோடில், கசோவானி அரசுத் தலைவராகத் தொடர்ந்து பதவி ஏற்ற விழாவில் கலந்து கொண்டார். அப்போது கசோவானி வாங் குவாங்ச்சியானுடன் சந்திப்பு நடத்தினார்.

வாங் குவாங்ச்சியான் கூறுகையில், சீன-மொரிட்டானியா உறவின் வளர்ச்சிக்கு சீனா பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. மொரிட்டானியாவுடன் இணைந்து, ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தி, பயனுடைய ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, பண்பாட்டுப் பரிமாற்றத்தை அதிகரித்து, இரு நாட்டுறவில் மேலும் நல்ல எதிர்காலத்தை உருவாக்க சீனா விரும்புகிறது என்றார்.

கசோவானி கூறுகையில், இரு நாட்டுப் பாரம்பரிய நட்புறவை மொரிட்டானியா பேணிமதித்து வருகிறது. சீனாவுடன் இணைந்து பல்வேறு துறைகளில் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, இரு நாட்டுறவை மேலும் உயர் கட்டத்துக்கு கொண்டு செல்ல விரும்புவதாக தெரிவித்தார்.