© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனா, ஆசியாவில் முதல் பெரிய பொருளாதாரமாகவும் உலகின் 2ஆவது பெரிய பொருளதாரமாகவும் திகழ்கிறது. கடந்த பல ஆண்டுகளில், சீனா பல துறைகளில் முன்னேற்றம் பெற்றுள்ளது என்று கிழக்கு திமோர் அரசுத் தலைவர் ஜோஸ் ராமோஸ் ஹோர்டா சுட்டிக்காட்டினார்.
சீனாவில் சமீபத்தில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட போது, சீன ஊடகக் குழுமத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணலில் அவர் இவ்வாறு கூறினார். இரு நாட்டுறவின் விரைவான வளர்ச்சியை முன்னெடுப்பதற்கான முக்கிய காரணம் குறித்து அவர் மேலும் கூறியதாவது
கடந்த பல தசாப்தங்களில், சீனா எந்த பெரிய போர்களிலும் கலந்து கொள்ளவில்லை. ஆப்கானிஸ்தான் போர், ஏமன் போர், ஈராக் போர், லிபியா போர் ஆகியற்றிலும் நடந்து கொண்டிருக்கிற உக்ரைன் நெருக்கடியிலும் சீனா முற்றிலும் பங்கேற்கவில்லை. ஐ.நா. பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு மத்தியில், சர்வதேச மோதலில் கலந்து கொள்ளாத ஒரேயொரு நாடு சீனா தான். எனவே, ஆசியா மற்றும் உலகவில் இந்த பெரிய நாட்டுடன் நெருக்கமான உறவை நிலைநிறுத்துவது இயல்பானது என்று குறிப்பிட்டார்.
சீன நவீமயமாக்கல் குறித்து அவர் கூறுகையில்
1976ஆம் ஆண்டு முதல்முறையாக சீனாவிற்கு வருவரை புரிந்தேன். குளிர்காலத்தில் சாலையில் பல்லாயிரக்கணக்கான மிதிவண்டிகளைக் கண்டேன். அப்போது பேருந்து அரிதாகவே காணப்பட்டது. ஆனால், அரைநூற்றாண்டுக்குப் பிறகு, சீனாவில் இவ்வளவு மாபெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இவ்வளவு பெரிய நாட்டில் தீவிர வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டது. வறிய நிலையில் வேளாண் பொருளாதாரத்தைச் சார்ந்திருந்த சீனா தற்போது அறிவியல் தொழில்நுட்பம், மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் முன்னேறிய நிலையை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்தார்.