அமெரிக்க டாலருக்கு எதிராக ஜப்பானிய யென்னின் மாற்று மதிப்பு உயர்வு
2024-08-05 14:37:33

சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் ஆகஸ்ட் 5ஆம் நாளில், அமெரிக்க டாலருக்கு எதிராக ஜப்பானிய யென்னின் மாற்று மதிப்பு உயர்ந்து, டாலர் ஒன்றுக்கு ஈடாக 144.96 ஜப்பானிய யென் என்ற அளவில் உள்ளது. இது, இவ்வாண்டின் ஜனவரி பாதி முதல் இது வரை மிக உயர்வான நிலையாகும்.

கொள்கை வட்டி விகிதம், 0 அல்லது 0.1 விழுக்காட்டிலிருந்து 0.25 விழுக்காட்டிற்கு உயர்த்தப்பட வேண்டும் என்று ஜப்பானின் மத்திய வங்கி ஜூலை 31ஆம் நாளில் நடத்திய நாணயக் கொள்கை கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளது.

ஜூன் 27ஆம் நாள் முதல் ஜூலை 29ஆம் நாள் வரை, 5 இலட்சத்து 50 ஆயிரம் கோடி ஜப்பானிய யென்னைப் பயன்படுத்தி, மாற்று விகிதத்தில் தலையீட்டுள்ளது என்று அந்நாட்டின் நிதி துறை அமைச்சகம் ஜூலை 31ஆம் நாள் அறிவித்துள்ளது.