உக்ரைனுடன் தூதாண்மை உறவு துண்டிப்பு:மாலி
2024-08-05 09:24:45

மாலி தற்காலிக அரசு 4ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையின்படி, மாலி மீது ஆக்கிரமிப்பு நடத்த உக்ரைன் அறிவித்ததையடுத்து, உக்ரைனுடன் தூதாண்மை உறவைத் துண்டிப்பதாக மாலி அரசு அறிவித்துள்ளது.

இவ்வறிக்கையின்படி, உக்ரைன் இராணுவ உளவு நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் ஆண்ட்ரி யூசோவ் சமீபத்தில் சில கருத்துக்களை தெரிவித்தார். பயங்கரவாத குழு நடத்திய தாக்குதலில் உக்ரைன் பங்கெடுத்து, மாலியின் வட கிழக்கு பகுதியில் நடைபெற்ற சண்டையில் மாலி இராணுவப் படைக்கு உயிரிழப்பு மற்றும் சொத்து இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

உக்ரைன் அரசின் இச்செயல், மாலியின் அரசுரிமையை பாதித்துள்ளது. வெளிநாட்டு தலையீட்டு அளவை மீறியுள்ளது. மாலி மீது ஆக்கிரமிப்பு நடத்துவது இதுவாகும். உக்ரைனுடன் தூதாண்மை உறவைத் துண்டிப்பதாக மாலி தற்காலிக அரசு முடிவு எடுத்துள்ளது என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.