சீனாவின் மொத்த வணிக பொருட்களின் விலைவாசி குறியீடு தொடர்ந்து 3 மாதங்களாக அதிகரிப்பு
2024-08-05 11:07:18

சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் 5ஆம் தேதியில், ஜூலை சீனாவின் மொத்த வணிகப் பொருட்களின் விலைவாசி குறியீட்டை வெளியிட்டது. அதன்படி, ஜூலை மாதத்தில் சீனாவின் மொத்த வணிக பொருட்களின் விலைவாசி குறியீட்டு 114.5ஆக உள்ளது. இது கடந்த மாதத்தை விட 2 சதவீதம் குறைந்துள்ளது. எனினும் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் மூன்று மாதங்களாகத் தொடர்ந்து வளர்ச்சியடைந்துள்ளது. சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் முக்கியமாக கவனம் செலுத்திய 50 மொத்த வணிக பொருட்களில், கடந்த மாதத்தை விட, ஜூலையில் 15 மொத்த வணிகப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. 

மொத்த வணிக பொருட்களின் விலைவாசி குறியீட்டு வளர்ச்சி போக்கின்படி, குறைந்த சந்தை தேவை, பதற்றமான புவியமைவு அரசியல், மற்றும் உலகளாவிய வர்த்தக முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் போன்ற அழுத்தங்களை உலகப் பொருளாதார வளர்ச்சி இன்னும் எதிர்கொண்டு வருவதாக நிபுணர்கள்  தெரிவித்தனர்.