ரஷிய மற்றும் எகிப்து வெளியுறவு அமைச்சர்களின் பரிமாற்றம்
2024-08-05 11:19:44

ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், எகிப்து வெளியுறவு அமைச்சர் பெதர் அப்துல் அட்டியினை ஆகஸ்டு 4ஆம் நாள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, பாலஸ்தீன-இஸ்ரேல் நிலைமை மற்றும் இரு நாடுகளின் உறவு குறித்து அவர்கள் விவாதித்தனர்.

இரு நாட்டு நலன்களுக்குப் பயனளிக்கும் அனைத்து துறைகளிலும் இரு நாடுகள் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை எதிர்பார்ப்பதாக லாவ்ரோவ் தெரிவித்தார். ரஷியாவுடனான உறவுக்கு எகிப்து முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாகவும் அட்டி தெரிவித்தார்.

பொதுவான அக்கறை கொண்ட பிரச்சினைகள், குறிப்பாக மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை மற்றும் பிராந்திய பதற்ற நிலைமை தீவிரமாகுவதைத் தணிப்பதற்கான முயற்சிகள் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். பிராந்திய பாதுகாப்பு மற்றும் நிதானத்தைப் பேணிகாப்பதற்கும், பிராந்திய மோதல் மோசமான சூழற்சியில் விழுவதைத் தவிர்ப்பதற்கும் முயற்சிகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.