© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனச் சரக்கு போக்குவரத்து துறையின் ஜுலை மாத வளர்ச்சிக் குறியீட்டைச் சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் 5ஆம் நாள் வெளியிட்டது. நாட்டின் பல இடங்கள் தொடர்ந்து அதிக வெப்பநிலை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், வணிக தேவை மற்றும் சரக்கு போக்குவரத்து உயிராற்றல் குறைந்துள்ளன. இதனால், சரக்குப் போக்குவரத்து வளர்ச்சிக் குறியீடு குறைந்துள்ளது. ஆனாலும் வளர்ச்சிக் குறியீடானது இன்னும் கட்டுக்குள் உள்ளது.
சீனச் சரக்கு போக்குவரத்து துறையின் ஜுலை மாத வளர்ச்சிக் குறியீடு 51 சதவீதத்தை எட்டி, முந்தைய மாதத்தை விட 0.6 சதவீத புள்ளிகள் குறைந்தது. அவற்றில், ரயில் சரக்குப் போக்குவரத்து, சாலைச் சரக்குப் போக்குவரத்து, விமான சரக்குப் போக்குவரத்து, கிடங்கு இருப்பு, சரக்கு இடமாற்றம், அஞ்சல் மற்றும் தூதஞ்சல் சேவை ஆகிய துறைகளின் மொத்த வணிக அளவு குறியீடுகள் அனைத்தும் விரிவாக்க வரம்பில் உள்ளன.
சந்தை தேவை குறித்து, ஜுலை மாதத்தில் சரக்குப் போக்குவரத்து துறையின் புதிய முன்பதிவு குறியீடு விரிவாக்க வரம்பில் தொடர்ந்து இருந்தது. புதிய தேவை பொதுவாக நிலையாக உள்ளது. சரக்குப் போக்குவரத்து முதலீடு அதிகரித்து வந்துள்ளது. அதன் வளர்ச்சி எதிர்பார்ப்பு நிலையாக வளர்ந்து வந்துள்ளது.