அமெரிக்க பங்குச் சந்தையில் கடும் சரிவு
2024-08-06 19:35:54

5ஆம் நாள் திங்கள்கிழமை, அமெரிக்காவின் நியூயார்க் பங்குச் சந்தையில் மூன்று முக்கிய குறியீடுகள் அனைத்தும் பெரிய வீழ்ச்சியை அடைந்தன. இவற்றில், நாஸ்டாக் காம்போசைட் குறியீடு, 3.43சதவீதம் சரிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீடு மற்றும் ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்ஸ் 500இன் பங்குக் குறியீடு முறையே 2.6 மற்றும் 3 சதவீதம் குறைந்தது.