சீன நீச்சல் அணி மீதான சந்தேகத்துக்குச் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பதில் அளிப்பு
2024-08-06 11:54:11

சீன நீச்சல் அணி மீதான சந்தேகம், சில ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களின் பாலினம் மீது சில செய்தி ஊடகங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் சந்தேகம் ஆகியவற்றுக்குச் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி 2ஆம் நாள் பதிலளித்தது.  நடப்பு பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் சீன நீச்சல் அணி பல உலக சாதனைகளைப் படைத்ததால், அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளைச் சேர்ந்த சிலர் பொறாமைப்பட்டு சந்தேகம் எழுப்பினர். இது குறித்து, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ் 2ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பதிலளிக்கையில், நடப்பு பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சீனாவின் நீச்சல் அணி மிக அதிகமாக ஊக்கமருந்து சோதனைகளை செய்துக்கொண்ட அணியாகும். ஜனவரி முதல் இதுவரை சீன அணி மொத்தமாக 600க்கும் அதிகமான சோதனைகளைச் செய்துள்ளது என்றும்  பாகுபாடின்றி விளையாட்டில் ஈடுபடும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்கள் அதன் பங்கேற்பு விதிகள் மற்றும் போட்டி விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். முந்தைய ஒலிம்பிக் குத்து சண்டை போல, விளையாட்டு வீரர்களின் பாலினம் மற்றும் வயது தங்கள் கடவுச்சீட்டைப் பின்பற்ற வேண்டும் என்றும் மார்க் ஆடம்ஸ் தெரிவித்தார்.