அமெரிக்க ஊக்க மருந்து எதிர்ப்பு முகாமின் இரட்டை நிலைப்பாடு
2024-08-06 19:51:13

அமெரிக்காவின் ஒலிம்பிக் விளையாட்டு வீரரான எர்ரியன் னைங்டன் என்பவரின் ஸ்டீராய்டு சோதனையில் நேர்மறை முடிவு பற்றிய அறிக்கையை சீன ஊக்கமருந்து எதிர்ப்பு மையம் ஆகஸ்ட் 6ஆம் நாள் வெளியிட்டது.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அமெரிக்காவின் தடகள விளையாட்டு வீரர் எர்ரியன் லைங்டனின் ஊக்கமருந்துச் சோதனையில் நேர்மறை முடிவு மீதான சந்தேகம் பற்றிய செய்தி சமீபத்தில் செய்தி ஊடகங்களில் வெளியிடப்பட்டது. இவ்வாண்டு மார்ச் 26ஆம் நாள் நடைபெற்ற ஸ்டீராய்டு வகையான (ட்ரென்போலோன்) சோதனை நேர்மறையாக இருந்தது. ஆனால், USADA என அழைக்கப்படும் அமெரிக்க  ஊக்க மருந்து எதிர்ப்பு முகாம், ஒலிம்பிக் போட்டிக்கான உள்நாட்டு தகுதி தேர்வு நடக்கும் முன்பு திடீரென ஒரு முடிவு எடுத்தது. மாசுபட்ட இறைச்சியை உட்கொண்டது,  இந்த நேர்மறையான சோதனையை விளைவித்தது. இந்நிலையில், அவர் போட்டியில் பங்கேற்க தடையில்லை என்று முடிவு எடுக்கப்பட்டது. இறுதியில், அமெரிக்க அணியின் பிரதிநிதி ஒருவராக அவர் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், அமெரிக்க ஊக்க மருந்து எதிர்ப்பு முகாம், சீன நீச்சல் விளையாட்டு வீரர்கள் தொடர்பாக, இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

அமெரிக்க ஊக்க மருந்து எதிர்ப்பு முகாம், நீண்டகலாமாக, தனது பிரச்சினையைப் பொருட்படுத்தாமல், எல்லையைத் தாண்டி பிற நாடுகளின் பணிகளை விமர்சிப்பதன் மூலம், தனது கடும் தவறுகளை மூடி மறைக்க முயன்று வருகிறது. இந்த செயல்பாடு, வெளிப்படையான அரசியல் சூழ்ச்சி மற்றும் பாசாங்குத்தனமான இரட்டை நிலைப்பாடு என்று இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.