தானியப் பாதுகாப்பு நெருக்கடியில் சூடான்
2024-08-06 10:05:45

ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆகஸ்ட் 5ஆம் நாள் சூடான் நிலைமை பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டது. முன்கண்டிராத தானிய பாதுகாப்பு நெருக்கடியில் சூடான் சிக்கியுள்ளது. வரலாற்றில் மிகவும் கடுமையான பஞ்சம் எதிர்நோக்கியுள்ளது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையின்படி. ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை, சூடானின் சில பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படக் கூடும். இது, விளைந்த பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி, உள்ளூர் பிரதேசத்தில் தானிய நெருக்கடியை மேலும் மோசமாக்கும். சர்வதேச சமூகம் அவசர, ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு, மேலும் கடுமையான பேரிடர் நிகழாமல் தவிர்க்க வேண்டும். சூடானின் ஆயுத மோதலில் சிக்கியுள்ள பல தரப்புகள் உடனடியாக பகைமை நடவடிக்கைகளை நிறுத்துவது என்பது மிகவும் முக்கியமானது என்று இவ்வமைப்பின் தலைமை செயலாளர் ஜூதோங்யூ இவ்வறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.