சீனாவின் வளர்ச்சி முன்மாதிரியாக உள்ளது! பாகிஸ்தான் தலைமையமைச்சர்
2024-08-07 11:10:08

பாகிஸ்தான் தலைமையமைச்சர் ஷெரிப் 6ஆம் நாள், அந்நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாதில் சீன ஊடகக் குழுமத்தின் செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது கூறுகையில்,

சீன கம்யூனிஸ்ட் கட்சி 20வது மத்திய கமிட்டியின் 3வது முழு அமர்வு வெற்றிகரமான கூட்டமாகும். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தொலைநோக்கு கொண்டவர். இதிலிருந்து பாகிஸ்தான் நலன்களைப் பெற்றுள்ளது என்றார் அவர்.

சீனத் தலைவர்கள் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், சீனாவை உலகில் 2ஆவது பொருளாதார நாடாக சீன மக்கள் கட்டியமைத்து வருகின்றனர். கோடிக்காணக்கான மக்கள் வறுமையிலிருந்து விடுப்பட்டு, கூட்டுச் செழுமையை நனவாக்கும் அற்புதத்தை சீன மக்கள் படைத்துள்ளனர். இது, நெடுநோக்கு தன்மை வாய்ந்த திட்டத்தின் நடைமுறையாகும். பாகிஸ்தானுக்கு முன்மாதிரி மற்றும் புதிய தீர்வுத் திட்டங்களை சீனாவின் வளர்ச்சி வழங்கியுள்ளது. சீனாவிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். பாகிஸ்தான் தற்சார்புடைய விரைவான வளர்ச்சியை நனவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.