மத்திய கிழக்கு நிலைமை குறித்து சீன-எகிப்து வெளியுறவு அமைச்சர்கள் தொடர்பு
2024-08-07 09:37:36

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ஆகஸ்ட் 6ஆம் நாள், எகிப்து வெளியுறவு மற்றும் குடியேறுவோர் துறையின் அமைச்சர் அப்துல் அத்தியுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார்.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் எகிப்து அரசுத் தலைவர் அப்தல் ஃபாடாஹ் அல் சிசியின் தலைமையில்,  இரு தரப்புகளுக்கிடையில் பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவு மாபெரும் வளர்ச்சி பெற்று, வரலாற்றில் மிகவும் சிறந்த அளவில் உள்ளது. இதன் மூலம், இரு நாடுகளின் அரசுத் தலைவர்களின் ஒருமித்த கருத்துக்களை முழுமையாக செயல்படுத்தி, புதிய யுகத்தை எதிர்நோக்கும் சீன-எகிப்து பொது சமூகத்தின் கட்டுமானத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று வாங்யீ தெரிவித்தார்.

மத்திய கிழக்கு நிலைமை குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். நீதி பக்கத்தில் சீனா ஊன்றி நின்று வருகிறது. அரபு நாடுகளுடன் ஒருமைப்பாடுகளை வலுப்படுத்தி, தொடர்புடைய தரப்புகளுடன் இணைந்து முயற்சி செய்து, இப்பிரதேசத்தின் நிலைமை மோசமாகாமல் இருப்பதை தவிர்க்க வேண்டும் என்று வாங்யீ தெரிவித்தார்.