கருத்துக்கணிப்பு: விளையாட்டுகளில் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு கடும் விமர்சனம்
2024-08-07 19:12:57

அமெரிக்காவில் கூறப்படும் ஊக்கமருந்து பிரச்சினையின் பின்விளைவு தொடர்ந்து பரவி வருகிறது. அதன் ஆதாரமற்ற அவதூறுகள் மீது சர்வதேச சமூகத்தில் இருந்து அதிக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது குறித்து, சி.ஜி.டி.என். தொலைக்காட்சி நிறுவனம் சமீபத்தில் இணையம் வழியாக நடத்திய கருத்துக் கணிப்பின்படி, விளையாட்டின் பெயரில் போட்டியாளர்களை அடக்குவது என்ற அமெரிக்காவின் செயலை 95.01விழுக்காட்டினர் கடுமையாகக் கண்டித்துள்ளனர், "அமெரிக்க மேலாதிக்கம்", ஒலிம்பிக் போட்டிகளை காலில் போட்டு மிதித்துள்ளது என்றும்  அவர்கள் விமர்சித்துள்ளனர்.

இவ்வாண்டின் மார்ச்சில் அமெரிக்க தடகள வீரர் எர்ரியன் நைங்டனின் ஊக்கமருந்து சோதனை முடிவு நேர்மறையாக இருந்தது. ஆனால், அமெரிக்க ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பு அவர் போட்டியில் பங்கேற்பதற்கு தடை விதிக்கவில்லை. மாறாக, அவர் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. மேலும் 90 சதவீத அமெரிக்க விளையாட்டு வீரர்கள் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பின் விதிமுறைக்கு இணங்கவில்லை. 96.25 விழுக்காட்டினர் ஊக்கமருந்து கட்டுப்பாடுகளில் அமெரிக்காவின் "இரட்டை நிலைப்பாட்டை" கடுமையாக விமர்சித்துள்ளனர்.