சீனாவின் சரக்கு வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு அதிகரிப்பு
2024-08-07 11:33:00

சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் ஆகஸ்டு 7ஆம் நாள் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 7 மாதங்களில், சீனாவின் சரக்கு வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு 24 லட்சத்து 83 ஆயிரம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 6.2 விழுக்காடு அதிகமாகும். இதில் ஏற்றுமதி மதிப்பு 14 லட்சத்து 26 ஆயிரம் கோடி யுவானாகவும், இறக்குமதி மதிப்பு 10 லட்சத்து 57 ஆயிரம் கோடி யுவானாகவும் திகழ்ந்து, முறையே 6.7 மற்றும் 5.4 விழுக்காடு அதிகரித்துள்ளன. மேலும், ஜூலை திங்கள், சீனாவின் சரக்கு வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு 3 லட்சத்து 68 ஆயிரம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் இருந்ததை விட 6.5 விழுக்காடு அதிகமாகும்.

இவ்வாண்டு, சீனப் பொருளாதார வளர்ச்சி நிதானமான நிலையில் உள்ளது. வெளிநாட்டு வர்த்தகம் சீரான வளர்ச்சிப் போக்கினை நிலைநிறுத்தி வருகிறது என்று சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகத்தின் புள்ளிவிபரப் பிரிவின் தலைவர் தெரிவித்தார்.