வங்காளதேச தற்காலிக அரசுக்கு முகமது யூனுஸ் தலைமை தலைமை ஏற்கிறார்
2024-08-07 19:38:01

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் முகமது யூனுஸ் வங்காளதேச தற்காலிக அரசின் முதன்மை ஆலோசகராகப் பதவியேற்று அரசுக்குத் தலைமை ஏற்கிறார் என்று அந்நாட்டின் அரசுத் தலைவரின் செய்திச் செயலாளர் ஜாய்னல் அபேடின் உறுதிப்படுத்தியதாக அந்நாட்டுத் தேசிய செய்தி நிறுவனம் 7ஆம் நாள் தெரிவித்தது.

வங்காளத் தேசம் ஒரு கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. தற்காலிக அரசை கூடிய விரைவில் அமைக்க வேண்டும். இந்நெருக்கடியைத் தீர்க்க அனைவரும் கூட்டாக முயற்சி செய்ய வேண்டும் என்று அந்நாட்டின் அரசுத் தலைவர் முகமது ஷஹாபுதீன் தெரிவித்தார்.