டாக்காவைச் சென்றடைந்தார் முகமது யூனுஸ்
2024-08-08 19:19:34

படம் : CFP

வங்காளதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக பொறுப்பேற்கும் முகமது யூனுஸ் 8ஆம் நாள் மாலை அந்நாட்டுத் தலைநகரான டாக்காவைச் சென்றடைந்தார்.

இடைக்கால அரசு பதவியேற்கும் விழா 8ஆம் நாளிரவு அரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ளது என்றும் தலைமை ஆலோசகராக யூனுஸ் இடைக்கால அரசுக்கு தலைமை ஏற்பார் என்றும் வங்காளதேச ராணுவத் தளபதி 7ஆம் நாள் தெரிவித்தார்.