© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
மூடிமறைத்தல், இரட்டை நிலைப்பாடு, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது ஆகிய குற்றச்சாட்டுகளுடன், அமெரிக்க தடகள விளையாட்டு நட்சத்திரமான எர்ரியன் நைங்டனின் ஊக்கமருந்து புகார் பரவியுள்ளது. அத்துடன், அமெரிக்க ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பின் நம்பகத்தன்மை பற்றிய நெருக்கடியும் தீவிரமாகி வேகமாக உருவாகி வருகிறது. இது குறித்து, சி.ஜி.டி.என். தொலைக்காட்சி நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தியது. அமெரிக்க ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பான யு.எஸ்.ஏ.டி.ஏ. ஊக்கமருந்தைப் பயன்டுத்திய அமெரிக்க விளையாட்டு வீரர்கள் தொடர்பான உண்மையை மூடிமறைக்க சாத்தியம் உண்டு என்று கருத்துக் கணிப்பில் 95.57 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாண்டின் மார்ச்சில் எர்ரியன் நைங்டனின் சோதனையில், உலக ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பினால் தடை செய்யப்பட்ட மருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், மாசுபட்ட இறைச்சி உட்கொண்டதைக் காரணமாகக் கொண்டு, போட்டியில் விளையாட தடையில்லை என்று முடிவு எடுக்கப்பட்டது. அமெரிக்கா நைங்டன் விவகாரத்தை மூடிமறைத்து, பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதித்த செயல், விளையாட்டுப் போட்டியின் நியாயத்தன்மையை கடுமையாக சீர்குலைத்துள்ளது என்று 90.15 விழுக்காட்டினர் தெரிவித்தனர். மேலும் இதுவே, அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு என்றும் 96.54 விழுக்காட்டினர் விமர்சித்துள்ளனர்.