மத்திய அமெரிக்க நாடுகளில் 1.1 கோடி மக்களுக்கு டெங்கு காய்ச்சல் தொற்று
2024-08-09 18:14:28

பான் அமெரிக்க சுகாதார அமைப்பு ஆகஸ்ட் 8ம் நாள் வெளியிட்ட ஓர் அறிக்கையில், இவ்வாண்டில் மத்திய அமெரிக்க நாடுகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்து வருகிறது. தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 1.1 கோடியைத் தாண்டி, கடந்த ஆண்டை விட 98 விழுக்காடு அதிகரித்தது. இவர்களில் 5900க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.