வங்காளத்தேசத்தின் தற்காலிக அரசு பற்றிய சீனாவின் கருத்து
2024-08-09 14:28:34

வங்காளத்தேசத்தில் தற்காலிக அரசு அமைக்கப்பட்டுள்ளது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர்  9ஆம் நாள் செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்தார்.  அப்போது அவர், வங்காளத்தேசத்தில் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக அரசின் மீது சீனா மிகுந்த கவனம் செலுத்தி வருவதோடு, புதிய அரசுக்கு வரவேற்பும் தெரிவிப்பதாகத் தெரிவித்தார்.  மேலும், பிற நாடுகளின் உள்விவகாரத்தில் தலையிடக்கூடாது என்னும் கொள்கையில் சீனா எப்போதும் ஊன்றி நின்று வருகின்றது என்று அவர் தெரிவித்தார். வங்காளத் தேசத்தின் சுதந்திரம், அரசுரிமை மற்றும் உரிமைப் பிரதேச ஒருமைப்பாட்டிற்கும் அந்நாட்டின் மக்கள் சொந்தமாகத் தேர்ந்தெடுத்துள்ள வளர்ச்சிப் பாதைக்கும் சீனா மதிப்பளித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

இரு தரப்புறவின் வளர்ச்சியில் சீனா மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. வங்காளத்தேசத்துடன் இணைந்து பாடுபட்டு, இரு நாடுகளின் பல்வேறு துறைகளுடனான பரிமாற்ற ஒத்துழைப்புகளை விரைவுபடுத்தவும், சீன-வங்காளத்தேச பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவின் வளர்ச்சி முன்னேற்றத்தைத் தூண்டவும் சீனா விரும்புவதாகவும் அவர் கூறினார்.