© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
இவ்வாண்டின் ஜனவரி முதல் ஜூலை வரை சீன-ஐரோப்பிய சரக்குத் தொடர்வண்டி சேவை மொத்தமாக 11 ஆயிரத்து 403 பயணம் மேற்கொண்டுள்ளது. 12 இலட்சத்து 26 ஆயிரம் கொள்கலன்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட முறையே 12 மற்றும் 11 விழுக்காடு அதிகமாகும் என்று சீனத் தேசிய இருப்புப் பாதை குழும நிறுவனத்திலிருந்து கிடைத்த தகவல் கூறுகின்றது.
இவ்வாண்டு முதல், சீன-ஐரோப்பிய சரக்குத் தொடர்வண்டி சேவையின் தரத்தையும் பயனையும் தொடர்ந்து உயர்த்தி, சர்வதேச விநியோக மற்றும் தொழில் சங்கிலிகளின் நிதானத்தையும் தங்கு தடையற்ற நிலைமையையும் பெரிதும் உத்தரவாதம் செய்து, சீனாவின் வெளிநாட்டு வர்த்தக வளர்ச்சிக்கும், உயர் தரமான வெளிநாட்டுத் திறப்புக்கும் சேவை செய்வதற்காக புதிய இயக்க ஆற்றலை ஊட்டுகின்றது என்று இந்த நிறுவனத்தைச் சேர்ந்த சரக்குப் போக்குவரத்து பிரிவின் பொறுப்பாளர் ஒருவர் கூறினார்.