காஸாவில் உள்ள குழந்தைகளுக்கு கூடுதலாக 5,90,000 டாலர்களை நன்கொடையாக இலங்கை வழங்கியது
2024-08-10 16:42:22

காசாவில் குழந்தைகள் நல நிதியத்திற்கு கூடுதலாக 590,000 டாலர் தொகை பாலஸ்தீன அரசிடம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையின் அரசு தலைவர் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசுத் தலைவர் செயலகத்தில் இதற்கான காசோலை அளிக்கும் நிகழ்வு கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

காசா பகுதியில் நடைபெற்று வரும் மோதல்கள்  காரணமாக இடம்பெயர்ந்த சிறுவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த நிதி அந்நாட்டின் அரசுத் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைக்கப்பட்டது.

முன்னதாக, கடந்த ஏப்ரல் திங்கள் 1 ஆம் தேதி பாலஸ்தீன அரசாங்கத்திற்கு 1 மில்லியன் டாலர்கள் நன்கொடையாக வழங்கப்பட்டதாக அந்நாட்டின் அரசு  தலைவர் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது