காசாவில் போர் நிறுத்துவது குறித்து பிரான்ஸ் அரசுத் தலைவரின் வேண்டுகோள்
2024-08-10 18:56:53

பிரான்ஸ் அரசுத் தலைவர் மாக்ரோன் அண்மையில் மத்திய கிழக்கு நிலைமை குறித்து எகிப்து, கத்தார் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, காசா பகுதியில் போர் நிறுத்தத்தை வெகுவிரைவில் நனவாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் என்று பிரான்ஸ் அரசுத் தலைவர் மாளிகை ஆகஸ்ட் 9ஆம் நாள் வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்து அரசுத் தலைவர் அப்துல் ஃபதாஹ் அல் சிசி, கத்தார் தலைமையமைச்சரும், வெளியுறவு அமைச்சருமான முகமது ஆகியோருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போது மாக்ரோன் கூறுகையில், பதற்ற நிலைமையை எதிர்நோக்கி, காசாவில் உடனடியாக போரை நிறுத்தி, காவலில் வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவித்து, காசாவில் உள்ள பொது மக்களுக்கு மனித நேய உதவியை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். இரு நாடுகள் திட்டத்தின் அடிப்படையில், நீண்டகால, நம்பகமான தீர்வு முறையை நாடுவதை தொடர்ந்து முன்னேற்ற மூன்று நாடுகளின் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.

பிரான்ஸ் அரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட இன்னொரு அறிக்கையின்படி, பிரிட்டன் தலைமையமைச்சர் ஸ்டார்மெருடன் தொலைபேசி மூலம் பேசிய போது, காசா பகுதியில் போரை நிறுத்துவது, உள்ளூர் அப்பாவி மக்களைப் பாதுகாத்து, மனித நேய உதவியை வழங்கி, நிலைமையைத் தணிவுபடுத்துவதற்கான நிபந்தனையாகும் என்று மாக்ரோன் தெரிவித்தார்.