சீனப் பொருளாதார வளர்ச்சி பற்றிய பொருளியல் நோபல் பரிசு பெற்றவரின் கருத்து
2024-08-11 16:29:05

தற்போது, சீனா, உலகத்துடன் நெருக்கமாகவும் ஆழமாகவும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணிகள் பெற்ற புதிய சாதனைகளின் மூலம், சீன நவீனமயமாக்கம் முன்னேற்றப்பட்டு வருகிறது. பொருளியல் நோபல் பரிசு பெற்றவரான எரிக் மாஸ்கின், கடந்த பல ஆண்டுகளாக, சீனப் பொருளாதார வளர்ச்சியில் பெரும் கவனம் செலுத்தி வருகிறார்.

அண்மையில், சீன ஊடகக் குழுமத்துக்கு அவர் சிறப்புப் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், கடந்த 40 ஆண்டுகளாக, சீனா பெரும் முன்னேற்றங்களைப் பெற்றுள்ளது. சீனப் பொருளாதாரம், உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு இயக்காற்றலை வழங்கி, அறைக்கூவல்களைச் சந்தித்த போது, மேலும் உறுதித் தன்மைகளை அளித்துள்ளது என்றார். மேலும், பல்வேறு நாடுகள் ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, திறப்பு மற்றும் கூட்டுப் பகிர்வை அதிகரித்து, கால வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார்.