© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
33ஆவது கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி 11ஆம் நாள் பாரிஸில் நிறைவடைந்தது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புப் பிரதிநிதியும், அரசவை உறுப்பினருமான சென்யிச்சின் அம்மையார் இதில் கலந்துகொண்டார்.
நிறைவு விழாவுக்கு முன்பு, அந்நாட்டின் அரசுத் தலைவர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் அவரது மனைவியுடன் உரையாடிய போது, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் அவரது மனைவி பங் லீயுவன் அம்மையாரின் வணக்கங்களைத் தெரிவித்தார். பாரிஸ் ஒலிம்பிக் வெற்றிகரமாக நடைபெற்றதற்கு அவர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும், வீரர்களுக்கு பிரான்ஸ் வழங்கிய ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார்.
முன்னதாக 10ஆம் நாளில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாச்சுடன் அவர் சந்தித்துரையாடினார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் இணைந்து, உயர் நிலை, நட்பார்ந்த ஒத்துழைப்பு உறவை ஆழமாக்கவும், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் வளர்ச்சி மற்றும் மனித குல பொது சமூகத்தின் கட்டுமானத்தை விரைவுபடுத்துவதற்கு புதிய, மேலதிக பங்காற்றவும் சீனா விரும்புகிறது என்று அவர் தெரிவித்தார்.