காசா பிரதேசத்தில் போர் நிறுத்தத்துக்கு பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆதரவு
2024-08-12 19:55:54

பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோன், ஜெர்மனியின் தலைமையமைச்சர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், பிரிட்டன் தலைமையமைச்சர் கீர் ஸ்டார்மர் ஆகியோர் ஆகஸ்டு 12ஆம் நாள் கூட்டறிக்கை ஒன்றில் கூட்டாக கையொப்பமிட்டு, காசா பிரதேசத்தில் போர் நிறுத்தத்துக்கு ஆதரவு அளித்தனர்.

மோதலை உடனடியாக நிறுத்தி, பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தால் தடைக் காவலில் வைக்கப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்றும், காசா பிரதேசத்திலுள்ள மக்கள் மனித நேய உதவியைத் தங்கு தடையின்றி பெற வேண்டும் என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இம்மூன்று நாடுகள், மோசமாகி வருகின்ற நிலைமையில் பெரும் கவனம் செலுத்தி வருகின்றன. இந்நிலைமையைத் தணிவுப்படுத்தி, பிரதேச நிலைத் தன்மையை நனவாக்க வேண்டும் என்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.