© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே உள்ள தற்காலிக எல்லைப் பகுதியின் லெபனான் பக்கத்திலுள்ள பல நகரங்களின் மீது இஸ்ரேல் படை 11ஆம் நாள் பன்முறை தாக்குதல் நடத்தியதாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் அன்று தெரிவித்தது. மேலும், அன்று, லெபனானின் தெற்கிலுள்ள தைபா நகரின் மீது இஸ்ரேல் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 2பேர் உயிரிழந்தனர் என்று அந்நாட்டின் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
அதோடு, ராக்கெட் மற்றும் ஆளில்லா விமானங்கள் தெற்கு லெபனானிலிருந்து இஸ்ரேலுக்குள் நுழைந்ததை இஸ்ரேல் படை கண்காணித்துள்ளது என்றும், பல இடங்களில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஏற்படுத்தப்பட்டது என்றும் இஸ்ரேல் தேசிய பாதுகாப்புப் படை 11ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.