© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
அதிக மகசூல், மற்றும் அனைத்து காலநிலைகளையும் தாங்கி வளரக்கூடிய 109 வகையான பயிர்களை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.
இந்த புதிய வகைகள் விவசாயிகளுக்கு மிகவும் பயனளிக்கும் என்றும், பயிர் உற்பத்தி செலவுகளை குறைக்கவும், சுற்றுச்சூழலின் பாதுகாப்புக்கும் உதவும் என்று அவர் தெரிவித்தார்..
இந்த புதிய பயிர் வகைகளைக் கண்டுபிடித்த வேளாண் விஞ்ஞானிகளைப் பாராட்டிய மோடி, இயற்கை விவசாயத்தில் உள்ள நன்மைகளால் நாட்டில் இயற்கை விவசாய உணவுப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதாகவும் கூறினார்.