© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
இவ்வாண்டின் முற்பாதியில், சீனப் பயணியர் விமானப் போக்குவரத்து சேவையின் மொத்த அளவு, பயணிகளின் பயண அளவு, சரக்குப் போக்குவரத்து சேவை அளவு ஆகியவை, 2019ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட முறையே 11.9, 9 மற்றும் 18.7 விழுக்காடு அதிகமாகும். முழு ஆண்டில் பயணிகளின் பயண அளவு 70 கோடியை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்று சீனப் பயணியர் விமானப் பணியகத்தின் தலைவர் சொங் ட்சியொங் ஆகஸ்டு 13ஆம் நாள் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், சீனப் பயணியர் விமானப் போக்குவரத்து அளவு, கடந்த 19 ஆண்டுகளாக உலகத்தில் 2வது இடத்தில் தொடர்ச்சியாக வகித்து, உலக விமானப் போக்குவரத்து சேவை அதிகரிப்புக்கு 20 விழுக்காட்டுக்கும் மேல் பங்காற்றியுள்ளது. “மக்களே முதன்மை” என்ற கருப்பொருளைக் கொண்டு, இடர்பாடுகள் மற்றும் அறைக்கூவல்களைக் கூட்டாகச் சமாளித்து, ஆக்கப்பூர்வமான பாதுகாப்புப் பண்பாட்டை உருவாக்கி, திறமைசாலிகளின் வளர்ப்பு மற்றும் தொழில் நுட்ப ஆதரவை வலுப்படுத்தி, சர்வதேச மற்றும் பிரதேச ஒத்துழைப்புகளை முன்னேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.