ஜூன் மாதத்தில் இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி 4.2 சதவீதம் வளர்ச்சி
2024-08-13 17:36:53

நாட்டின் தொழிற்சாலை செயல்பாடுகள், கடந்த ஜூன் மாதத்தில், 4.2 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2024ம் ஆண்டின் ஜூன் மாதத்திற்கு, அடிப்படை தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் மதிப்பீடு 2023 ஆம் ஆண்டில் ஜூன் மாதத்தில் 143.9 க்கு எதிராக 150.0 ஆக உள்ளது. 2024 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில்  சுரங்கம், உற்பத்தி மற்றும் மின்சாரத் துறைகளுக்கான தொழில்துறை உற்பத்தியின் குறியீடுகள் முறையே 134.9, 145.3 மற்றும் 222.8 ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த ஜூன்  மாதத்தில், தொழில்துறை உற்பத்தி குறியீடுகளான முதன்மை பொருட்கள் துறை 156.0 ஆகவும், மூலதன பொருட்கள் துறை 110.0 ஆகவும், மறுஉற்பத்தி செய்யக்கூடிய வர்த்தக பொருட்கள் துறை 159.0 ஆகவும் மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான பொருட்கள் துறை 178.4 ஆகவும் உள்ளன. மேலும், நுகர்வோர் சாதனங்கள் மற்றும் நுகர்வோர் அல்லாத பொருட்களுக்கான உற்பத்தி குறியீடுகள் 126.9 மற்றும் 144.6 ஆக இருப்பதாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மே மாதத்தில் தொழில் உற்பத்திக் குறியீடு 6.2 சதவீத வளர்ச்சியைக் கண்டது குறிப்பிடத்தக்கது.