© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
ஸ்டார்லிங்க் லங்கா (தனியார்) லிமிடெட் நிறுவனத்திற்கு நாடு முழுவதும் தொலைத்தொடர்பு மற்றும் அகண்ட இணைய சேவை வழங்குனருக்கான உரிமத்தை இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு வழங்கியுள்ளதாக அந்நாட்டின் அரசுத் தலைவர் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை முதல் நாடு முழுவதும் செயற்கைக்கோள் அகண்ட இணைய சேவைகளை வழங்க ஸ்டார்லிங்க் லங்காவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் நடைபெற்ற 10 வது உலக நீர் மன்றக் கூட்டத்தின் போது இலங்கை அரசு தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எலோன் மஸ்க் ஆகியோர் கலந்து உரையாடினர். அப்போது இலங்கையில் எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நெட்வொர்க் நிறுவன சேவை தொடங்குவது குறித்து அவர்கள் விவாதித்தனர்.
ஸ்டார்லிங்க், ஒரு செயற்கைக்கோள் மூலம் இணைய சேவை வழங்கக்கூடிய நிறுவனமாகும். இந்நிறுவனம் சுமார் 100 நாடுகளுக்கு செயற்கைக்கோள் மூலம் இணைய சேவையை வழங்குவதாக எலோன் மஸ்க் கூறினார்.