காசாப் பிரதேசத்தில் போர் நிறுத்தம் பற்றி சீனா கருத்து
2024-08-14 19:31:51

அமெரிக்கா பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, காசாப் பிரதேசத்தில் ராணுவ நடவடிக்கையையும் அப்பாவி மக்களைக் கொலை செய்வதையும் இஸ்ரேல் வெகுவிரைவில் நிறுத்துவதை முன்னேற்ற வேண்டும் என்று ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ஃபு ட்சுங் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 13ஆம் நாள் நடைபெற்ற பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினை பற்றிய ஐ.நா பாதுகாப்பவையின் அவசர வெளிப்படைக் கூட்டத்தில் அவர் கூறுகையில், நிரந்தர போர் நிறுத்தத்தை உடனடியாக நனவாக்குவது, காசாப் பிரதேசத்தின் பொது மக்களின் அவசர எதிர்பார்ப்பாகவும், சர்வதேச சமூகத்தின் ஒத்த கருத்தாகவும் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், சர்வதேச சமூகத்துடன் இணைந்து, காசாப் பிரதேசத்தில் போரை வெகுவிரைவில் நிறுத்தி, மனித நேய சீற்றத்தைத் தணிவுபடுத்தி, “இரு நாடுகள் திட்டத்தை” செயல்படுத்தி, மத்திய கிழக்கு பிரதேசத்தில் நீண்டகால அமைதி மற்றும் பாதுகாப்பை நனவாக்குவதற்கு விடா முயற்சிகளை மேற்கொள்ள சீனா விரும்புவதாகவும் தெரிவித்தார்.