சீனச் செல்லிடபேசி சந்தையின் வளர்ச்சி
2024-08-14 11:03:44

இவ்வாண்டின் முற்பாதியில், சீனாவின் உள்நாட்டுச் செல்லிடபேசி சந்தை வளர்ச்சி முன்னேற்றப் போக்கை நிலைநிறுத்தியது. சீனத் தகவல் மற்றும் தொடர்பு கழகம் வெளியிட்ட தரவுகளின்படி, முதல் 6 மாதங்களில், உள்நாட்டுச் சந்தையில் விற்பனையாளருக்கு அனுப்பப்பட்டுள்ள செல்லிடபேசி எண்ணிக்கை 14 கோடியே 7 இலட்சமாகும். இது, கடந்த ஆண்டை விட 13.2 விழுக்காடு அதிகம். இதில், 5ஜி செல்லிடபேசி எண்ணிக்கை 12 கோடியே 40 இலட்சத்தை எட்டி, கடந்த ஆண்டை விட 21.5 விழுக்காடு அதிகரித்தது. இவ்வெண்ணிக்கை மொத்த எண்ணிக்கையில் 84.4 விழுக்காட்டை வகித்துள்ளது.

சீனா சொந்தமாக தயாரிக்கும் செல்லிடபேசிகள் சீராக வளர்ந்து வருகின்றன. தரவுகளின்படி, இவ்வாண்டின் முற்பாதியில், விற்பனையாளருக்கு வினியோகிக்கப்பட்ட செல்லிடபேசி எண்ணிக்கை 12 கோடியே 40 இலட்சமாகும். இது, கடந்த ஆண்டை விட 17.6 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.