லிப்ரல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் தேர்தலில் கிஷிடா போட்டியிடவில்லை
2024-08-14 14:34:40

ஜப்பான் தலைமையமைச்சர் ஃபுமியோ கிஷிடா, லிப்ரல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று அக்கட்சியின் உறுப்பினர்களிடம் தெரிவித்தார் என்று ஆகஸ்ட் 14ஆம் நாள் சீன ஊடகக் குழுமச் செய்தியாளர் ஒருவர் தெர்வித்தார். ஜப்பானின் தற்போதைய ஆளும் கூட்டணியில் லிப்ரல் ஜனநாயகக் கட்சி மிகப்பெரிய அரசியல் கட்சியாகும். மேலும் லிப்ரல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் பொதுவாக ஜப்பான் தலைமையமைச்சராகப் பதவியேற்பார். இந்த நிலையில், லிப்ரல் ஜனநாயகக் கட்சி புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், கிஷிடா ஜப்பான் தலைமையமைச்சர் பதவியிலிருந்து விலகுவார்.

தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்ற கிஷிடாவின் முடிவு, அமைச்சரவை மீது தொடர்ச்சியான மந்தமான ஆதரவு விகிதத்துடன் தொடர்புடையது என்று சில ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர்.