சீனாவின் தியோயூ தீவு கடல் பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்த ஜப்பானின் மீன்பிடிக்கப்பல்களுக்கு எச்சரிக்கை
2024-08-15 15:03:06

ஆகஸ்ட் 14ஆம் நாள் ஜப்பானைச் சேர்ந்த மீன்பிடிக்கப்பல் ஒன்று சீனாவின் தியோயூ தீவு கடல் பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்தது. அதனையடுத்து சீனக் கடற்காவல்துறை சட்டத்தின் படி தேவையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு கப்பலை வெளியேற்றுமாறு எச்சரித்தது. தியோயூ தீவும் அதைச் சேர்ந்த தீவுகளும் சீனாவுக்குரிய உரிமைப் பிரதேசங்களாகும். ஜப்பான் இக்கடல் பரப்பில் மேற்கொண்ட அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய இறையாண்மை, பாதுகாப்பு, கடல் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், சீனக் கடல் காவல்துறை கப்பல்கள் சட்டப்படி தங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட நீர்ப்பரப்பில் உரிமையைப் பேணிக்காத்து, சட்ட அமலாக்க நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும்.