காசாவில் புதிய சுற்று போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடக்கம்
2024-08-15 09:24:16

காசாவில் புதிய சுற்று போர் நிறுத்த பேச்சுவார்த்தை 15ஆம் நாள், கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்றது. இஸ்ரேல், கத்தார், அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர். ஆனால், ஹாமாஸ் இயக்கம் இப்பேச்சுவார்த்தையில் பங்கெடுக்கவில்லை.

இதனிடையில், புதிய சுற்று பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்தால் போர் நிறுத்தம் குறித்து, இஸ்ரேல் புதிய நிபந்தனைகளை வழங்கி, பேச்சுத்தையின் மூலம் காசா பகுதி மீது படுகொலைகளை நடத்தும் என்று 14ஆம் நாள், ஹாமாஸ் இயக்கத்தின் உயர் நிலை அதிகாரியான சாமி அபு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த போது தெரிவித்தார்.

முன்னதாக செய்தி அறிந்தவரின் கூற்றின்படி, தோஹாவில் புதிய சுற்று பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, இணக்க முயற்சி செய்வதற்குரிய தொடர்புடைய தரப்புகள் ஹமாஸுடன் கலந்தாய்வை நடத்தும்.