இயற்கையின் நன்கொடை: வண்ண வண்ணமான பீடபூமி
2024-08-15 14:31:32

இங்கே, ட்சிங்காய் மாகாணத்தின் டொங்தே மாவட்டம். ட்ரோன் மூலம் பிடிக்கப்பட்ட இந்த வீடியோவில், கழுகுப் பார்வையில் முழுக் காட்சியை நீங்கள் கண்டுரசிக்கலாம்.

'தாய் ஆறு' என்ற மஞ்சள் ஆற்றின் நீர் ஓட்டம், ஸிசாங்தான்சியா தேசிய நிலவியல் பூங்காவில் சிவப்புநிற நிலவடிவம், பரந்தப்பட்ட புல்வெளியில் கருப்புநிற மாடுகள் மற்றும் வெள்ளைநிற  ஆடுகள் கூட்டம்,  பசுமை காடுகள், வயல்களில் மஞ்சள் வண்ணமான கடுகு மலர் மற்றும்  பசுமை காய்கறி செடிகள் போன்ற கண்கொள்ளா காட்சி,  எங்களை வியக்க வைக்கிறது.

கடல் மட்டத்தில் இருந்து 3 கிலோமீட்டம் உயரத்தில் வண்ண வண்ணமான பீடபூமிக் காட்சி, மனிதன்கள் இயற்கையோடு இணக்கமாக வாழ்ந்து வருவதை எடுத்துக்காட்டுகிறது. 2023ஆம் ஆண்டு முதல் தெளிந்த தண்ணீர் மற்றும் பசுமை மலை தங்கம் போன்ற மதிப்புமிக்கது என்ற வளர்ச்சிக் கோட்பாட்டைப் புதுமையான முறையில் நடைமுறைப்படுத்தும் தளம் டொங்தேயில் உருவாக்கப்பட்டது. அதற்கு ஏற்பு, இதில் இயற்கைச் சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு, சூழலியல் சுற்றுலா ஆகியவற்றை ஒருங்கிணைத்து வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இன்று, ட்சிங்காய்-சிஜாங் பீடபூமியின் இயற்கைச் சூற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, டொங்தே மாவட்டத்தில் இயற்கை பாதுகாப்புத்தளத்தின் முன்மாதிரி உருவாக்கப்பட்டு வருகிறது.