சீனாவின் முதலாவது தாராள வர்த்தக மண்டலத்தில் சீன-ஐரோப்பிய சரக்கு தொடர்வண்டி சேவை அதிகம்
2024-08-16 14:20:16

சீனாவின் முதலாவது தாராள வர்த்தக மண்டலத்தில் சீனாவின் சியாமன்-ஐரோப்பிய சரக்கு தொடர்வண்டி சேவை, 2015ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 16ஆம் நாள் முதன்முறையாக தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை மொத்தமாக 1335 முறை இயக்கப்பட்டுள்ளது. இப்பயணங்களின் வழி எடுத்துச் செல்லப்பட்ட ஒரு இலட்சத்து 13 ஆயிரம் சரக்குக் கொள்கலன்களின் மூலம் 3402 கோடி யுவான் மதிப்புள்ள சரக்கு பொருட்கள் ஏற்றியிறக்கல் செய்யப்பட்டுள்ளன.

இடவமைவு மற்றும் கொள்கை மேம்பாடுகள் காரணமாக இத்தொடர்வண்டி சேவை, ஒரு வழித்தடத்தில் இருந்து 7 வழித்தடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்கள் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவைக் கூட்டாகக் கட்டியமைக்கும் 13 நாடுகளின் 30க்கும் மேலான நகரங்கள் உள்ளடக்கிச் செல்கின்றன. ஜப்பான், தென் கொரியா, தென் கிழக்காசியா ஆகியவை, ஐரோப்பாவுடனான சர்வதேச சரக்கு புழக்க வழிபாதையாக இது மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.