வெளிநாட்டு வணிகர்களின் முதலீட்டை ஊக்குவிப்பதற்கான சீனாவின் நடவடிக்கை
2024-08-16 19:50:22

வெளிநாட்டு வணிகர்களின் முதலீட்டை ஊக்குவிக்கும் பல நடவடிக்கைகளை வெளியிட்டு, உயர் நிலை திறப்பு அமைப்புமுறையை மேம்படுத்தும் என்று சீன வணிக அமைச்சகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் ஆகஸ்டு 15ஆம் நாள் நடைபெற்ற சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகத்தின் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அன்னிய முதலீடு அனுமதிக்கப்படும் கட்டுப்பாட்டைத் தொடர்ந்து தளர்த்தி, அன்னிய முதலீட்டுக்கான புதிய எதிர்மறை பட்டியலை வெகுவிரைவில் வெளியிடும் என்றும், தொலை தொடர்பு, இணையம், கல்வி, பண்பாடு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் திறப்பு அளவை விரிவுபடுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தகுநிலை பெறுதல், வரையறை வகுத்தல், அரசு கொள்வனவு முதலிய துறைகளில், வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களின் சலுகைகளை உத்தரவாதம் செய்து, சீனாவின் சீர்திருத்தம் மற்றும் திறப்புக்கான நலன்களை மேலதிக வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

தவிரவும், நாடு கடந்த நிறுவனங்களின் தலைவர்களின் 5வது உச்சி மாநாடு ஆகஸ்டு 27 முதல் 29ஆம் நாள் வரை ட்சிங்தாவ் நகரில் நடைபெறவுள்ளது என்று இக்கூட்டத்தில் தெரிய வந்துள்ளது.