புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இந்திய விண்வெளி ஆய்வு மையம்
2024-08-16 17:38:46

புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான இஓஎஸ்-08யுடன் சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் ஊர்தி (எஸ்.எஸ்.எல்.வி) -டி 3 ஐ இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) கடந்த வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எஸ்.எஸ்.எல்.வி.-டி3 ஏவுதல் ஊர்தி ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 9.17 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

எஸ்.எஸ்.எல்.வி-டி3 ஏவுதல் ஊர்தி, ஈ.ஓ.எஸ் -08 செயற்கைகோளை திட்டமிட்டப் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது என்று இஸ்ரோ தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் "இது இஸ்ரோவின் எஸ்.எஸ்.எல்.வி மேம்பாட்டுத் தொழில்நுட்பத் திட்டத்தின் வெற்றியை நிரூபித்துள்ளது. வரும் காலங்களில் இத்தகைய தொழில்நுட்பம் மூலம் வணிக ரீதியிலான செயற்கைகோள்கள் எஸ்.எஸ்.எல்.வி மூலம் ஏவப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.