© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ ஆகஸ்ட் 15ஆம் நாள் சியாங் மாய் நகரில் லாவோஸ் துணைத் தலைமை அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான சலேம்க்சே கொம்மாசிதை சந்தித்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது, வாங்யீ கூறுகையில், இரு கட்சி மற்றும் இரு நாட்டுத் தலைவர்களின் நெடுநோக்கு பார்வையுடன் கூடிய தலைமையில், சீன-லாவோஸ் பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானம் உயர்வேகமாக முன்னேற்றப்பட்டு வருகிறது என்றார். மேலும், லாவோஸ் தரப்புடன் இணைந்து பல்வேறு துறைகளில் ஒன்றுக்கொன்று நன்மை தரும் ஒத்துழைப்புகளைத் தொடர்ந்து ஆழமாக்க சீனா விரும்புவதாகக் குறிப்பிட்ட அவர், சீன-லாவோஸ் இருப்புப்பாதையின் ஒட்டுமொத்த பலனை வெளிக்கொணர்ந்து கூட்டு முயற்சியுடன் தடைகளை நீக்கி அதன் நெடுகிலுள்ள ஒட்டுமொத்த வளர்ச்சியை விரைவுபடுத்தித் தத்தமது வளர்ச்சிக்குச் சேவையளிக்க, விரும்புகிறோம் என்றும் குறிப்பிட்டார்.
சலேம்க்சே குறிப்பிடுகையில், சீனாவுடன் இணைந்து இரு நாட்டுத் தலைவர்கள் எட்டியுள்ள முக்கிய ஒருமித்த கருத்துகளை செவ்வனே நடைமுறைப்படுத்த லாவோஸ் விரும்புவதாகக் கூறினார். மேலும், சீனாவுடனான உயர் நிலைப் பரிமாற்றத்தை நெருக்கமாக்கி ஒன்றுடன் ஒன்று இணைந்து, கனிம வளம் உள்ளிட்ட துறைகளின் ஒத்துழைப்புகளை மேலும் ஆழமாக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். அதோடு, எல்லை கடந்த குற்றத்தைக் கூட்டாகத் தடுத்து லாவோஸ்-சீன பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தில் மேலதிக சாதனைகளைப் பெறும் வகையில் இரு நாட்டு மக்களுக்கு மேலதிக நன்மைகளை அளிப்பதை முன்னேற்ற வேண்டும் என்றும் சலேம்க்சே விருப்பம் தெரிவித்தார்.