புதிய சுற்று பேச்சுவார்த்தை தோஹாவில் தொடரும்:கத்தார்
2024-08-16 11:36:57

காசா போர் நிறுத்தம் தொடர்பாக தோஹாவில் 15 ஆம் நாள் தொடங்கிய புதிய சுற்று பேச்சுவார்த்தை, 16ஆம் நாளும் தொடரும் என்று கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி 15ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

போர் நிறுத்தம் தொடர்பாக கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகியவை சமரச முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. காசா பகுதியில் போர் நிறுத்த உடன்படிக்கையை எட்டி, தடைக் காவலில் வைக்கப்பட்டுள்ளோரை விடுவிப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து மேலதிகமான மனித நேய உதவிகள் காசா பகுதியில் நுழைவதை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, காசாவில் புதிய சுற்று போர் நிறுத்த பேச்சுவார்த்தை 15ஆம் நாள் தோஹாவில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. கத்தார், எகிப்து, அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய 4 தரப்புகள் இதில் கலந்துகொண்டுள்ளன.