காசாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பற்றிய ஐ.நா மனித உரிமை நிறுவனத்தின் அறிக்கை
2024-08-16 19:31:19

காசா பிரதேசத்தில் இது வரை 40 ஆயிரத்துக்கு மேலானோர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மகளிர் மற்றும் குழந்தைகளாகும். முழு உலகத்தைப் பொறுத்த வரை இது “கொடிய மைல் கல்லாகும்” என்று ஐ.நா மனித நேய விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் 15ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் புதிய சுற்று பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் மூண்ட பிறகு, காசா பிரதேசத்தில் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையினால் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்று காசாப் பிரதேசத்தில் உள்ள பாலஸ்தீனச் சுகாதார வாரியம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் வீடுகள், மருத்துவ மனைகள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களின் மீது இஸ்ரேல் படை மேற்கொண்டுள்ள பெருமளவிலான சீர்குலைப்பு, மக்களை “அதிர்ச்சி அடையச் செய்துள்ளது” என்று இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது. தொடர்புடைய தரப்புகள் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்றும், பாலஸ்தீன உரிமைப் பிரதேசத்தின் மீதான இஸ்ரேலின் சட்டப்பூர்வமற்ற நில ஆக்கிரமிப்பை நிறுத்தி, “இரு நாடுகள் திட்டத்தை” நனவாக்க வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.