© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
லான்சாங் மற்றும் மே கொங் ஆற்று ஒத்துழைப்புக்கான 9ஆவது தூதாண்மை அமைச்சர் கூட்டம் தாய்லாந்தின் சியங்மெய் நகரில் ஆக்ஸ்டு 16ஆம் நாள் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீவும் தாய்லாந்து துணை வெளியுறவு அமைச்சர் எஸ்லியும் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினர்.
லான்சாங் மற்றும் மே கொங் ஆற்றுப்பள்ளத்தாக்கில் அமைந்துள்ள 6 நாடுகள், இயற்கை ஒத்துழைப்புக் கூட்டாளியாகவும் நீண்டகால நட்பு அண்டை நாடுகளாகவும் திகழ்வதாக வாங்யீ தெரிவித்தார். இப்பிரதேசத்தின் அடுத்த கட்ட ஒத்துழைப்புக்கு அவர் நான்கு முன்மொழிவுகளையும் முன்வைத்துள்ளார். முதலாவது, அமைதி மற்றும் நிதான அடிப்படையில் உண்மையான பலதரப்புவாதத்திலும் திறந்த பிரதேசவாதத்திலும் ஊன்றி நிற்க வேண்டும். இரண்டாவது புத்தாக்கத்தில் கவனம் செலுத்தி AI ஆற்றல் கட்டுமானத்தை வலுப்படுத்தி, இப்பிரதேசத்திலுள்ள நாடுகளின் வளர்ச்சிக்கு மேலதிக சேவை வழங்க வேண்டும். மூன்றாவது, இணைப்பு வளர்ச்சியை வலுப்படுத்தி, லான்சாங் மற்றும் மே கொங் ஆற்றுப்பள்ளத்தாக்கின் தொடர்ப்பை விரைவுபடுத்த வேண்டும். நான்காவது மக்களிடையே பரிமாற்றத்தை வலுப்படுத்தி, லான்சாங் மற்றும் மே கொங் ஆற்றுக்கலாச்சாரத்தை வளர்க்க வேண்டும் என்று வாங்யீ குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு தரப்புகள் லான்சாங் மற்றும் மே கொங் ஆற்று இந்த ஒத்துழைப்பு அமைப்புமுறை பெற்றுள்ள ஆக்கப்பூர்வ முன்னேற்றத்தை பாராட்டியுள்ளனர்.
கூட்டத்தில் கூட்டு செய்தியறிக்கையும், நீர் மூலவள ஒத்துழைப்பை ஆழமாக்குவது, காற்றின் தரத்தை உறுதி செய்வது, நாடு கடந்த குற்றங்களைத் தடுப்பது உள்ளிட்ட மூன்று அறிக்கைகளும் வெளியிடப்பட்டன.